Home இலங்கை சமூகம் யாழில் ஒரு மாதக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழில் ஒரு மாதக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

0

யாழில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) – இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை (26) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர், குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு (Base Hospital Thellippalai) கொண்டு சென்றுள்ளனர்.

பால் புரைக்கேறியதால் ஏற்பட்ட மரணம்

இதேவேளை குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-40-day-old-baby-died-after-drinking-milk-jaffna-1719464309

NO COMMENTS

Exit mobile version