Home சினிமா பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக களமிறங்கும் பிரபல நட்சத்திர ஜோடி..யார் தெரியுமா?

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக களமிறங்கும் பிரபல நட்சத்திர ஜோடி..யார் தெரியுமா?

0

நடிகர் பிரபாஸ்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் வெளிவந்தது.

இதில், ‘கல்கி 2898 ஏடி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது. அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

திரைப்படம் போல் ஒளிபரப்பாகப்போகும் பிரபல சீரியல்…புது முயற்சி, எந்த டிவி தொடர் தெரியுமா?

வெளியான புது அப்டேட் 

இதில் ‘ஸ்பிரிட்’ படத்தை

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த ஒரு புது அப்டேட் வெளி வந்துள்ளது.

அதன்படி, இந்த படத்தில் பிரபாசுக்கு வில்லி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் ஜோடியான சைப் அலிகான் – கரீனா கபூர் வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும், இந்த படம் 8 மொழிகளில் 2026 -ம் ஆண்டு வெளிவர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version