கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானம் மூலம் இலங்கைக்கு குஷ் மற்றும் கொக்கைன் போதைப்பொருளை இறக்குமதி செய்த காரணத்திற்காகவே குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் நாவலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வீட்டில் சொகுசு காரொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாய் கொடுத்து அவர் காரை கொள்வனவு செய்துள்ளதாக சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
மேலும் இத்தினங்களில் அதிகமாக பேசப்படும் பிரபல நடிகை ஒருவரின் பெயரில் குறித்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
