Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

0

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய (01) தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இயற்கை எரிவாயு

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, மாதாந்த விலை சூத்திரத்தின்படி, நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-fall-in-the-price-of-lubricants-1725166667

NO COMMENTS

Exit mobile version