Home இலங்கை குற்றம் யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

0

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர்
ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் (03) உயிர்மாய்த்துள்ளார்.

உடுவில்,
மல்வம் பகுதியைச் சேர்ந்த தவராசா ஜெயசுதன் (வயது 46) என்ற குடும்பஸ்தரே
இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

பொலிஸார் விசாரணை 

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் இதற்கு முன்னரும் ஒருதடவை உயிர்மாய்க்க முற்பட்டதாக
அறியமுடிகிறது.

இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றி விழுந்து உயிர்மாய்த்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version