Home இலங்கை சமூகம் உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து: பிரதான வீதிக்கு பூட்டு

உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து: பிரதான வீதிக்கு பூட்டு

0

கண்டி (Kandy) – அக்குரணையில் (Akurana) உள்ள உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இன்று (05) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருவதாவது, உணவகத்தில் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதானால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதுவரையில் தீயை கட்டுப்படுத்த முடியத நிலையில் கண்டி – மாத்தளை (Matale) வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/a-fire-broke-out-in-a-restaurant-in-akurana-1720152878

NO COMMENTS

Exit mobile version