Home இலங்கை சமூகம் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து! தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

0

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மாதம்பே – கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் அனர்த்தம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இந்த நிலையில் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் குறித்த பேருந்து முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/a-fire-broke-out-on-a-bus-leaving-colombo-1728535485

NO COMMENTS

Exit mobile version