Home இலங்கை சமூகம் முள்ளியவளை கூழாமுறிப்பு தேக்கம் காட்டில் பரவிய காட்டுத் தீ

முள்ளியவளை கூழாமுறிப்பு தேக்கம் காட்டில் பரவிய காட்டுத் தீ

0

Courtesy: Sutharsini

முள்ளியவளை கூழாமுறிப்பு தேக்கம் காட்டினுள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கூழாமுறிப்பு B காட்டின் முள்ளியவளை மாங்குளம் வீதியின் ஓரமாக உள்ள தேக்கம் காட்டினுள்ளேய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

02.05.224 அன்றைய நாளின் நண்பகல் வேளையில் இந்த தீ வைக்கப்பட்டிருக்கலாம் என வீதியால் பயணிக்கும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தேக்கம் காட்டினுள் தீ 

 சூழல் வெப்பம் மிக உயர்வாக இருக்கும் இந்த நாட்களில் காட்டினுள் தீ வைத்தல் விரும்பத்தக்க செயற்பாடாக இருக்காது.

தேக்கம் காட்டினுள் உள்ள சருகுகளை அகற்றுவதற்காக தேக்கம் காட்டினுள் தீ வைத்தல் நடைமுறை என்ற போதும் தேக்கம் காட்டினையடுத்து கூழாமுறிப்பு B பெருங்காடு இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

உலகின் அண்மைக் காலங்களில் காட்டுத்தீயினால் ஏற்பட்டுவரும் நெருக்கடி பாரிய சூழல் பிரச்சினைகளுக்கு வித்திட்டு வருகின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/a-forest-fire-in-the-crushing-reservoir-forest-1714658199

NO COMMENTS

Exit mobile version