Home இலங்கை சமூகம் யாழில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகத்திற்கு தீ வைத்த வன்முறைக் கும்பல்

யாழில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகத்திற்கு தீ வைத்த வன்முறைக் கும்பல்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடி (Nelliaddy) பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆடையகமொன்று வன்முறைக் கும்பலினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (02.10.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

தீப்பரவல் காரணமாக ஆடையகத்தில் உள்ள பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்வம் நடைபெற்ற ஆடையகத்தில் சில வாரங்களுக்கு முன்பும் நுழைந்த வன்முறைக் கும்பல் தீ வைக்க முயன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/a-garment-factory-has-been-set-on-fire-jaffna-1727927697

NO COMMENTS

Exit mobile version