Home இலங்கை சமூகம் இயக்கச்சி றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா

இயக்கச்சி றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா

0

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

இந்நிலையில் றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7,8,14, 15 ஆம் திகதிகளில் றீ(ச்)ஷாவின் அக்ஷய பாத்திரம் 2024 எனும் தொனிப்பொருளில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை இசைக்கச்சேரி, பொழுது போக்கு, இராபோஜனம், சமையல் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன.

குறித்த தினங்களில் றீ(ச்)ஷா பண்ணைக்கு சென்று இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு அனைவரும் கலாசார அனுபவத்துடன் இயற்கை வழி உணவுச் சுவைகளை ருசிக்கலாம்.

Source: https://tamilwin.com/article/a-grand-food-festival-at-iyakkacchi-reecha-1723717210

NO COMMENTS

Exit mobile version