Home இலங்கை சமூகம் துர்நாற்றம் வீசும் மருதமுனை கடற்கரை பகுதிகள்: கடற்றொழிலாளர்கள் விசனம்

துர்நாற்றம் வீசும் மருதமுனை கடற்கரை பகுதிகள்: கடற்றொழிலாளர்கள் விசனம்

0

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிகளில் ஹம்மிங் மீனினங்கள்  கரையொதுங்கி
இறப்பதன் காரணமாக  துர்நாற்றம் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும், பொதுமக்கள் பெரும்
அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக இவ்வாறான மீன்கள் கரை ஒதுங்குவதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பத்து தொடக்கம் பதினைந்து வருடங்கள்

அத்துடன் இம்மீன் இனம் கடந்த பத்து தொடக்கம் பதினைந்து வருடங்களுக்கு பின்னர் கரை ஒதுங்குவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.

நாவல் – கறுப்பு நிறம் கொண்ட
மீன்கள் பல்லாயிரக் கணக்கில் இறந்து கரையொதுங்கியுள்ளதுடன் 25 சென்மீட்டர்
நீளமுள்ள இவ்வகை மீன் இனமானது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில்
கலிபோர்னியாவிலிருந்து அலாஸ்கா வரை வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வகையான மீன் இனம் தங்களது
இனத்தை பெருக்கி கொள்வதற்காக காலநிலை மாற்றங்களின் போது கற்பாறைகளினுள்
இருந்து வெளிப்படுவதுடன் பெரும்பாலும் இவை இரவு வேளைகளிலேயே கரைக்கு வருவது
வழமை என்றும் தெரவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version