வலஸ்முல்லயை சேர்ந்த 33 வயது வேட்டைக்காரர் ஒருவர் சைக்கிளில்
சென்று கொண்டிருந்தபோது இடுப்பில் சுமந்து சென்ற துப்பாக்கி தவறுதலாக
வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(15) காலை இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி
இலங்கை இராணுவ பொறியியல் படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சிப்பாயான அவர், பலத்த
காயமடைந்து வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
உயிரிழந்துள்ளார்.
விசாரணையின்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அதிகாலை 2 மணியளவில்
வெடித்தபோதே, அது அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை
தெரியவந்துள்ளது.
