Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் திடீரென பற்றி எரிந்த வீடு! மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தை

கிளிநொச்சியில் திடீரென பற்றி எரிந்த வீடு! மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தை

0

கிளிநொச்சி (Kilinochchi) – கண்டாவளை பகுதியில் வீடு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவமானது, புன்னைநீராவி பிரதேசத்திற்குட்பட்ட கண்ணகிநகரில் இன்று (30) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த வீட்டில் இருந்த பெண் வீட்டிலிருந்து வெளியில் சென்று மீனை வெட்டிக் கொண்டிருந்த
பொழுது திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது.

தீப்பரவல்

இதனை அவதானித்த அவர்  ஓடிச்
சென்று தொட்டிலில் படுத்துறங்கிய அவரது குழந்தையை தூக்கி எடுத்து காப்பாற்றியுள்ளார். 

இதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட
தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது.

இதன்போது, வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன்
பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று
முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வீடு எரிந்து நாசம்

இதனையடுத்து குறித்த குடும்பத்தினர்  தற்பொழுது இடமின்றி அயலவர் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த
போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இடைநடுவே
கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு
ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும் தற்பொழுது அதுவும் தீயில் எரிந்து
இல்லாமல் போய் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version