மட்டக்களப்பு(Batticaloa) – வவுணதீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு நீர் நிலையிலிருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று(26.12. 2024) மீட்கப்பட்டதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு, காந்திநகர் சின்ன சிப்பிமடுவைச் சேர்ந்த 51 வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என்பவரே இதன்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “குறித்த நபர் கடந்த திங்கட்கிழமை (23) காலையில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் நேற்று(26) வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் மேற்கொண்ட தேடுதல் முயற்ச்சியில் நீர் நிலையில் அழுகியவாறு மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.