Home உலகம் இந்தியாவில் ராமர் வேடத்தில் நடித்தவருக்கு மேடையில் நடந்த துயரம்

இந்தியாவில் ராமர் வேடத்தில் நடித்தவருக்கு மேடையில் நடந்த துயரம்

0

இந்தியாவில் டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா நாடக நிகழ்ச்சி ஒன்றில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்தவர் மேடையிலேயே உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவராத்திரி விழாவை முன்னிட்டு கிழக்கு டெல்லியில் விஸ்வகர்மா நகரில் ஷாதரா பகுதியில் ராம்லீலா நாடக நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

திடீர் மாரடைப்பு

இதன்போது, ராமர் கதாபாத்திரத்தில் நடித்த கௌசிக் என்ற 45 வயதுடைய நபர் திடீரென மார்பை கையால் பிடித்துக்கொண்டு மேடைக்கு பின்புறம் சென்ற நிலையில் சுயநினைவை இழந்து சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/a-man-died-while-playing-rama-drama-in-stage-1728210785

NO COMMENTS

Exit mobile version