Home இலங்கை குற்றம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞன்

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞன்

0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

மீகலேவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (06) மாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/a-man-was-arrested-with-a-domestic-gun-1743989130

NO COMMENTS

Exit mobile version