Home முக்கியச் செய்திகள் யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு

0

யாழில் (Jaffna) கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த நபரின் சடலமானது இன்று (23) காலை பொன்னாலையில் கரையொதிங்கியிருந்த படகிலிருந்து  மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 54 வயதுடைய பேரானந்த
சிதம்பரம் நாகராஜா (Perananda Chidambaram Nagaraja) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

 உயரிழந்த நபர் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக
கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் இன்று காலை வரை திரும்பி
வராத நிலையில் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று (23)  காலை
பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

மேலும், சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்படுகின்ற நிலையில் வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-man-went-to-fishing-in-yali-recovered-dead-body-1727068757?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version