யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று ஏழு இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போயுள்ளது.
வடமராட்சி – நாகர்கோவில் வடக்கு, முருகையா ஆலயத்தில் நேற்றைய தினம் (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆலயத்தில் தற்போது திருவிழா நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற நிலையில், 7ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய
தினம் நடைபெற்றது.
ஏலத்தில் விடப்பட்ட மாம்பழம்
இதன்போது முருகப் பெருமானிற்கும், அவரது அண்ணனான கணபதிக்கும்
மாம்பழத்திற்காக நடந்த கதையினை கூறி, பின் அந்த மாம்பழத்தினை பக்தர்களுக்காக
ஏலத்தில் விடுவார்கள்.
அவ்வாறு நடக்கின்ற போது, இறைவன் அருள் பெற்றதாக நம்பப்படும் குறித்த மாம்பழம் ஒன்றினை
ஏழு இலட்சம் ரூபாவிற்கு பக்த அடியார் ஒருவர் வாங்கியுள்ளார்.
இதேவேளை கடந்த வருடமும் இவ் ஆலயத்தின் மாம்பழத் திருவிழாவின் போது இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மாம்பழம் ஏலத்தில் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/NkPJLp1BcsE