Home இலங்கை சமூகம் கிளிநொச்சி – இரணை மடுக்குளத்தின் கீழான பெரும் போகபயிர் செய்கை தொடர்பான கூட்டம்

கிளிநொச்சி – இரணை மடுக்குளத்தின் கீழான பெரும் போகபயிர் செய்கை தொடர்பான கூட்டம்

0

கிளிநொச்சி, இரணை மடுக்குளத்தின் கீழான 2024/2025 பெரும் போகபயிர் செய்கை
தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரின்
பங்கு பற்றுதலுடன் இன்று (26.09.2024) இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

இதன்போது, இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றொதுக்கு பிரதேசங்கள்
கழிவு வாய்க்கால்கள் வீதிகள் என்பவற்றை தவிர்த்து பயிர் செய்கை மேற்கொள்வது
தொடர்பாக கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி, கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பிரதி மாகாண விவசாய
பணிப்பாளர் நீர்ப்பாசன பொறியியியலார், துறை சார்ந்த திணைக்கள
தலைவர்கள் மற்றும் விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக
விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், சிறுபோக பயிர் செய்கையின் போது
தனிப்பட்ட சிலர் நன்மை அடையக்கூடிய வகையில் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் குற்றம்
சாட்டப்பட்டு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version