Home இலங்கை சமூகம் விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

0

இலங்கையில் (Sri Lanka) ஒரு வருடத்திற்கு 100,000 இற்கும் அதிகமானோர் விவசாயத்துறையில் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல (Wasantha Athukorala) தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  நேற்று (05.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய பொருட்களின் உற்பத்தி

இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.என்.எம் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த விசேட வேலைத்திட்டம், நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version