Home இலங்கை அரசியல் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!

0

இலங்கையில் நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (03.12.2025) நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

எதிர்க்கட்சியின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற யோசணையை முன்மொழிந்திருந்தார்.

சீரற்ற வானிலை

நாட்டில் கடந்த 26 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஐநூறை நெருங்கியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியது. 

இதன்போது, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. 

எனினும், அன்றைய தினம் மதியம் 12.30 வரை மாத்திரமே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாட அனுமதிக்க முடியும் என அரசாங்க தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் இன்றைய தினத்துக்கு (03.12.2025) ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version