Home இலங்கை சமூகம் கச்சத்தீவு உடன்படிக்கைக்கு இன்றுடன் 50 ஆண்டுகள்

கச்சத்தீவு உடன்படிக்கைக்கு இன்றுடன் 50 ஆண்டுகள்

0

Courtesy: Sivaa Mayuri

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் விடயத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டு இன்றுடன் 50 வருடங்கள் ஆகின்றன.

இது தொடர்பில் இந்திய இணையம் ஒன்று 1974ஆம் ஆண்டில் வெளியான செய்தியை பிரசுரித்துள்ளது

இந்தநிலையில், கச்சத்தீவு உடன்படிக்கை 1974 ஜூன் மாதம் 26-28 ஆம் திகதிகளில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உடன்படிக்கை  

எனினும், அந்த உடன்படிக்கை 1974 ஜூலை 8 ஆம் திகதியன்றே நடைமுறைக்கு வந்தது.

இதற்கிடையில், நேற்றைய தினம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு மத்திய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அதனை நம்பலாம் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version