Home இலங்கை குற்றம் அரச பாடசாலை ஒன்றின் கல்விசாரா பெண் ஊழியர் கைது

அரச பாடசாலை ஒன்றின் கல்விசாரா பெண் ஊழியர் கைது

0

Courtesy: Sivaa Mayuri

210 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படும், அரச பாடசாலையின் கல்விசாரா பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போதிமலுவ கோவிலுக்கு அருகில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை

அயகம பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விசாரா ஊழியராக கடமையாற்றிய இவர், திட்டமிட்ட குற்றத்திற்காக போதைப்பொருள் விநியோகம் மற்றும் மிதிகம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வழிகாட்டுதலின் பேரில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அந்த பெண், பாடசாலையில் பணிபுரிந்த போதிலும், அவர் இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக பாடசாலையைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version