Home இலங்கை சமூகம் இலங்கையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள மாவட்டம்!

இலங்கையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள மாவட்டம்!

0

கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை மாவட்டத்தில் 148.5 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாட்டை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக பல பிரதேசங்களில் மழை நிலைமை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர் மட்டம்

இதேவேளை, களுகங்கையின் கிளை ஆறான குடா கங்கை, மில்லகந்த பிரதேசத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலையாக காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

களு ங்கையின் மற்றுமொரு கிளை ஆறான மகுரு கங்கையின் நீர் மட்டம், மகுர பிரதேசத்தில் சிறு வெள்ளமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version