Home இலங்கை சமூகம் மனிதர்களை போல பேசும் அதிசய காகம்: வைரலாகும் காணொளி

மனிதர்களை போல பேசும் அதிசய காகம்: வைரலாகும் காணொளி

0

சமூக ஊடகங்களில் (Social Media) நம்மை தினமும் ஆச்சரியப்படுத்தும் பல விடயங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அந்த வகையில், தற்போது காகம் ஒன்று பேசும் காணொளி அனைவரையும் புதுமைக்குள்ளாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் வாடா தாலுகா கா்காவ் கிராமத்தில் தனுஜா முக்னே என்ற பெண்ணொருவர் வசித்து வருகின்றார்.

பேசும் காகம்

இவர் ஒரு நாள் தனது தோட்டத்திற்கு சென்றபோது காகம் ஒன்று காயமடைந்து கிடந்ததை கண்டு அதனை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து, காகம் குணமடைந்து பறக்க தொடங்கியதும் வேறு எங்கும் செல்லாமல் அவரது வீட்டையே சுற்றி வந்துள்ளது.

அத்துடன், குறித்த காகாத்திற்கு தனுஜா பாசத்தோடு உணவு ஊட்டி விட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரலாகும் காணொளி

இவ்வாறு இருக்கையில், திடீர் அதிசயமாக அவரது வீட்டில் பேசும் பேச்சுவழக்கை காகம் அறிந்து காகா (மாமா), பாபா (தந்தை) மம்மி (தாய்) உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசி வருகிறது.

இந்நிலையில், இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version