Home இலங்கை சமூகம் அரிசி தட்டுப்பாட்டிற்கு யார் காரணம்…! உண்மையை உடைத்த பிரபல அரிசி வியாபாரி

அரிசி தட்டுப்பாட்டிற்கு யார் காரணம்…! உண்மையை உடைத்த பிரபல அரிசி வியாபாரி

0

தற்போதைய அரிசி பிரச்சினைக்கு தற்போதைய ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல என பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன(Dudley Sirisena) தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், திட்டமிடாமல் முறைசாரா சாகுபடி செய்வதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

76 வருடங்கள் நாட்டை ஆண்டவர்களால் ஏற்பட்ட நெருக்கடி 

கீரி சம்பா அரிசி மாத்திரமே தனது அரிசி ஆலை மூலம் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

76 வருடங்கள் நாட்டை ஆண்ட தனது சகோதரர் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் இந்த நெருக்கடியை உருவாக்கினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பருவத்திற்கு நாடு மற்றும் ஒரு பருவத்திற்கு கீரி சம்பா என பயிர்ச்செய்கை மேற்கொள்வதே இந்த நெருக்கடிக்கு காரணம் எனவும் டட்லி சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

வரும் பருவத்தில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு

மேலும், நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்துக்கு ஏற்ப நாட்டு அரிசி சாகுபடி செய்யாவிட்டாலும், வரும் பருவத்தில் கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கணித்து, சிறப்பு செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தினார்.

NO COMMENTS

Exit mobile version