Home இலங்கை சமூகம் வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் முதலை

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் முதலை

0

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்திற்குள் முதலை ஒன்று வந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வவுனியாவில் பருவமழை ஆரம்பித்துள்ளதுடன், கடந்தசில நாட்களாக மழையுடனான காலநிலை
நிலவி வருகின்றது.

இந்நிலையில் பூந்தோட்டம் பகுதியில் உள்ள காணி ஒன்றிற்குள் சுமார் நான்கு அடி
நீளம் கொண்ட முதலை ஒன்று நேற்றையதினம் (02.11.2024) மாலை நேரம் உள்நுளைந்துள்ளது.

முதலையை அகற்றிய பொலிஸார்

இதன் பின்னர், வீட்டின் உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த முதலையை அங்கிருந்து
அகற்றியிருந்தனர்.  

Source: https://tamilwin.com/article/crocodile-in-vavuniya-village-1730580418

NO COMMENTS

Exit mobile version