Home இலங்கை சமூகம் இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு குறித்து மோடியின் நகர்வு

இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு குறித்து மோடியின் நகர்வு

0

இந்தியப் (India) பிரதமர் கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவன செய்வார் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (06) திறந்து வைத்தார்.

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 தமிழர்களின் நலன்

இதன்படி, இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு தான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பிரதமர் நிறைவேற்றியுள்ளதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்றொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளமை, கடற்றொழிலாளர்களின் படகுகள் மீட்கப்பட்டமை, உள்ளிட்டவை தான் பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகளாலேயே சாத்தியம் எனத் தேசிக சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்

அத்தோடு, இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் இந்தியப் பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவைத் தாரைவார்த்தவர்களே இன்று அதை மீட்க வேண்டும் எனப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட மதுரை ஆதீனம் சுவாமிகள்,

இந்தியப் பிரதமர் கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவண செய்வார் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this…!

https://www.youtube.com/embed/cNR0gt_7ZJ8

NO COMMENTS

Exit mobile version