Home இலங்கை சமூகம் பென்சில்களை பயன்படுத்தி வாக்களித்தவர்களுக்கான விசேட அறிவிப்பு

பென்சில்களை பயன்படுத்தி வாக்களித்தவர்களுக்கான விசேட அறிவிப்பு

0

பென்சில் பயன்படுத்தி வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளும் செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதில் மேலும், சில வாக்களிப்பு நிலையங்களில் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க பேனாவுக்குப் பதிலாக பென்சில்கள் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

செல்லுபடியாகும் என தகவல்

அதன்படி, குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு கார்பன் பேனாவை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனினும், கார்பன் பேனாவுக்குப் பதிலாக பென்சில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுக்களும் செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/a-special-notice-for-those-who-voted-in-pencils-1726916833

NO COMMENTS

Exit mobile version