ராகமையைச் சேர்ந்த 43 வயதுடைய தேரர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(10.09.2025) இடம்பெற்றுள்ளது.
போலி எண் தகடுகளுடன் சட்டவிரோதமாக அசெம்பள் செய்யப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலி எண் தகடுகள்
குறித்த காரை தற்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் அதன் எண் தகடுகள் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
