Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களை துரத்திய காட்டு யானையால் ஏற்பட்ட பரபரப்பு!

பாடசாலை மாணவர்களை துரத்திய காட்டு யானையால் ஏற்பட்ட பரபரப்பு!

0

குமுழமுனை ஆறுமுகத்தான்குளம் கிராமத்திற்குள் இன்று காலை புகுந்த காட்டு
யானையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நுழைந்த காட்டுயானை ஆறுமுகத்தான்
அ.த.க பாடசாலை அருகாமையில், மாணவர்களை இன்று (15.09.2025) காலை துரத்தியுள்ளது.

மாணவர்களை துரத்திய காட்டு யானை

பாடசாலை நிர்வாகத்தினரால் வலயகல்வி பணிமனைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு
வருகைதந்த வலயகல்வி பணிமனையினர் பாடசாலைக்குள் இருந்த 10 மாணவர்களையும்
பெற்றோரை அழைத்து பாதுகாப்பாக அனுப்புமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

 

பாடசலைக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து யானை பொருட்களை
சேதப்படுத்தியுள்ளது.

ஊர்மக்கள் இணைந்து யானையை விரட்ட முடியாதமையினால் வன
ஜீவராசிகள் திணைகளத்தினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு
வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டியுள்ளனர்.

குறித்த யானை கிராமத்திற்குள் மூன்று மணித்தியாலயங்களுக்கு மேலாக
நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version