யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவரை காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா என்ற 35 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ளை கடந்த 30.09.2024 அன்றலிருந்து காணவில்லை என அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
இந்த விடயம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கணவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்களை +94 75 389 6732 இலக்கத்திற்கு தகவல்
வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
மேலதிக தகவல்கள் – கஜிந்தன்