Home இலங்கை சமூகம் சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு

சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு

0

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி
ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

யாழ். கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி (வயது 21)
என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பொலிஸ் 

“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன்
சென்றுள்ளார்.

தொடர்ந்து நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு
வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட
நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இதன்போது தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில்
இருந்த குறித்த யுவதி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://tamilwin.com/article/a-young-woman-committed-suicide-in-yali-1727652349

NO COMMENTS

Exit mobile version