Home இலங்கை சமூகம் காதலனின் பாட்டியை காண சென்ற யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

காதலனின் பாட்டியை காண சென்ற யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

0

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தன் காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

வாதுவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான பிரசாதினி பிரியங்கிகா, நேற்று மதியம் தனது காதலனின் பாட்டியின் நலனை விசாரிக்க களுத்துறை பனாபிட்டியவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

விபத்து சம்பவம்

அதன்போது, காதலன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு மேய்ச்சலுக்காக வீட்டின் பின்னால் சென்றிருந்தார், அந்த நேரத்தில் பிரியங்காவும் வீட்டின் பின்னால் உள்ள மதிலின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், ​​திடீரென மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து, பிரியங்கா அதன் அடியில் சிக்கியுள்ளார்.

அப்பபோது, குடியிருப்பாளர்கள் உடனடியாக பிரியங்காவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version