Home இலங்கை சமூகம் புத்தாண்டு விடுமுறைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

புத்தாண்டு விடுமுறைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் கலபட (Galaboda) நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்
போயுள்ளார்.

குறித்த இளைஞன் நாவலப்பிட்டி, கலபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி, வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய விஜயகுமார் ஜாக்சன் என்ற
இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞன் 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காணாமல் போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன், நேற்று (17) காலை கலபட
நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான
நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் சென்றுள்ளார்.

அதாவது, நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள காட்டின் வழியாக சட்டவிரோதமாக
நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

காணாமல் போன இளைஞன் கொழும்பில் வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக
வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

இந்நிலையில், நீர்வீழ்ச்சியில் காணாமல் போன இளைஞனின் உடலைத் தேடுவதற்காக
மக்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களால் உடலைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனால், சடலத்தைக் கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவியைப் பெற
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version