Home சினிமா முருகதாஸ் எப்படிப்பட்டவர் தெரியுமா? பாலிவுட் நடிகர் அமீர் கான் வியந்து சொன்னது

முருகதாஸ் எப்படிப்பட்டவர் தெரியுமா? பாலிவுட் நடிகர் அமீர் கான் வியந்து சொன்னது

0

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பாப்புலராக இருப்பவர். அவர் ஹிந்தியில் கஜினி ரீமேக், துப்பாக்கி ரீமேக் என பல படங்களை ஹிந்தியில் எடுத்திருக்கிறார்.

கஜினி படத்தில் அவருடன் பணியாற்றியா அனுபவம் பற்றி அமீர் கான் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது வியந்து பேசி இருக்கிறார்.

முகத்துக்கு நேராக சொல்லிடுவார்..

முருகதாஸ் என்ற பெயரை கேட்டால் 6 அடி நபர் போல தோன்றும், ஆனால் குள்ளமான ஒரு நபர். அவரை முதலில் சந்தித்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர் உடன் பணியாற்றும்போது நான் எதாவது படத்தின் changes கூறினால், அது சரியில்லை என்றால் முகத்துக்கு நேராக அப்படியே சொல்லிவிடுவார். எதிரில் இருப்பவர் வருத்தப்படுவாரே என்றெல்லாம் யோசிக்கவே மாட்டார்.

அதே போல சொன்ன ஐடியா நன்றாக இருந்தால், ‘சூப்பர்ஹிட் சார்.. சூப்பர்ஹிட் சார்’ என சொல்லி பாராட்டி ஏற்றுக்கொள்வார்.

எதையும் பூசி மொழுகாமல் ஓப்பனாக பேசுவதை நான் அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என அமீர் கான் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version