Home இலங்கை சமூகம் யாழ். வடமராட்சியில் அனாதரவாக காணப்படும் மோட்டார் சைக்கிள்

யாழ். வடமராட்சியில் அனாதரவாக காணப்படும் மோட்டார் சைக்கிள்

0

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் அனாதரவாக மோட்டார்
சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கிராமக்கோடு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதனை திருடன் என நினைத்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

விடிந்ததும் வெளியே வந்து பார்த்தபோது மாதா சொரூபத்தோடு மோதிய நிலையில்
மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயலர்கள்
பருத்தித்துறை பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version