Home உலகம் உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

0

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும் மெழுகு சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பாளர்கள்

அண்மைக்காலமாக அமெரிக்காவின் (America) பல பகுதிகள் தீவிர வெப்பநிலையை ஏற்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், வானிலை முன்னறிவிப்பாளர்கள் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை இந்த மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/abraham-lincoln-wax-statue-melts-in-washington-dc-1719387093

NO COMMENTS

Exit mobile version