Home இலங்கை அரசியல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மாகாணசபை முறை தொடரும் : அனுரகுமார

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மாகாணசபை முறை தொடரும் : அனுரகுமார

0

Courtesy: Sivaa Mayuri

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போதைய வடிவத்திலேயே தொடரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

லண்டனில் (London) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், தேசியப் பிரச்சினைக்கு மாகாண சபை முறைமையை தீர்வாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இடைக்காலத் தீர்வு

இந்தநிலையில் மாகாண சபையானது தமக்கு கிடைத்த உரிமை என தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் நம்புகின்றன.

எனவே அந்த முறைமையை நீக்குவது தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வாக மாகாணசபை முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எனினும் அது நிரந்தரத் தீர்வாகாது என்ற அடிப்படையில், நிரந்தரத் தீர்வைக் கண்டறியும் வரை அந்த முறையை தற்போதைய வடிவத்தில் தொடர்வதே தமது கட்சியின் கொள்கை என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version