பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 29ஆம் திகதிக்குள் முழுமையாக மீண்டும் தொடங்கும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.எம்.டி.மதுஜித் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா சூறாவளியின் தாக்கத்தால் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
பீடங்களின் கல்வி நடவடிக்கைகள்
இந்த நிலையில் 3 பீடங்களின் நடவடிக்கைகள் டிசம்பர் 16ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ பீடம், இணை சுகாதார பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவை தேர்வு நடவடிக்கைகள் காரணமாக இந்த முறையில் தொடங்கப்பட்டுள்ளன.
விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவை டிசம்பர் 29ஆம் திகதி தொடங்கப்படும். கலை பீடம் மற்றும் அறிவியல் பீடம் என்பவற்றை ஜனவரி 5ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்தப் பேரிடர் காரணமாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட கட்டிடக்கலைப் பீடத்தின் ஒரு கட்டிடத்திற்கு மாணவர்களை அனுப்புவது ஆபத்தானது என்பதால் அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
2024 உயர்தரப் பரீட்சையில் தேறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னர் திட்டமிடப்பட்டபடி பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
