திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி
சென்ற முச்சக்கவண்டி ஒன்று கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் (27) பிற்பகல்
1:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணை
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார்,
அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தில் திடீரென இயந்திரக்
கோளாறு ஏற்பட்டு பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து கால்வாய்குள்
விழுந்ததாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.