மத்திய மலைநாட்டின் வலப்பனை அருகே சுமார் ஐநூறு அடி பாதாள பள்ளமொன்றில் கெப்ரக வாகனமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலப்பனை-கண்டி வீதியில் கும்பல்கமுவ, தென்னேவல பிரதேசத்தில் இன்று(26) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் வலப்பனை பிரதேசத்தில் தனியார் கல்வி நிலைய வகுப்பொன்றை நடத்திவரும் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான வாகனத்தை அவரே செலுத்தி வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக தற்போதைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
