கிளிநொச்சியில் கொழும்பில் இருந்து வந்த அரச பேரூந்து வான் ஒன்றுடன் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து கிளிநொச்சி –
உமையாள்புரம் பகுதியில் இன்றையதினம் (21) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த அரச பேரூந்தானது கிளிநொச்சி
உமையாள்புரத்தில் வான் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது விபத்து
சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இவ் விபத்தின் போது பேரூந்து மற்றும் வாகனத்தில் வந்த எவருக்கும் எந்த
சேதங்களும் ஏற்படவில்லை.
இருப்பினும் வாகனம் மட்டும் பாரியளவு சேதத்திற்கு
உள்ளாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
