Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் சென்ற பேருந்து அனுராதபுரத்தில் கோர விபத்து : இருவர் பலி! இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சென்ற பேருந்து அனுராதபுரத்தில் கோர விபத்து : இருவர் பலி! இருவர் படுகாயம்

0

அனுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதெனிய பிரதான வீதியில் இன்று (23) காலை முச்சக்கரவண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து 

இதேவேளை எப்பாவல காவல்துறை பிரிவிற்குட்பட்ட மடியாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியில் (Ratnapura) இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்தும், அனுராதபுரத்தில் இருந்து தலாவ நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியின் சாரதி வீதிக்கு எதிர்ப்புறம் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

அனுராதபுரத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொசன் கொண்டாட்டத்தில் கலந்து விட்டு இளைஞர்கள் குழு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version