மட்டக்களப்பு (Batticalo) – கல்முனை பிரதான வீதியின் களுதாவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுதாவளை இராகிருஷ்ண வித்தியாலயத்திற்கு
முன்னால் இன்று (15.10.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரிக் கடவையில் பயணித்த பாடசாலை மாணவியும் அவருடைய தாயாருமே இவ்வாறு படுகாயம் அடைந்துள்ளனர்.
திடீரென மோதிய முச்சக்கரவண்டி
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு
எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் கடந்தனர்.
இதன்போது தீடீரென
வந்த முச்சக்கரவண்டி தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த
மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் பிள்ளையும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளதாடு, விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
