Home முக்கியச் செய்திகள் அதிகாலையில் கோர விபத்து: பம்பலப்பிட்டியில் மோதிய வாகனங்கள் : பலர் காயம்

அதிகாலையில் கோர விபத்து: பம்பலப்பிட்டியில் மோதிய வாகனங்கள் : பலர் காயம்

0

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் வாகனங்கள் மீது, வேகமாக வந்த லொரி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணை

வெள்ளவத்தை திசையிலிருந்து கொழுப்பிட்டி நோக்கிச் சென்ற லொரி ஒன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகனங்களுடன் மோதிய பின்னர், அந்த லொரி ரயில் வீதியை நோக்கிச் சென்று, இறுதியாக தொடருந்து தண்டவாளத்தில் நின்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version