Home இலங்கை சமூகம் கந்தளாயில் விபத்து: 19 வயது யுவதி பலி

கந்தளாயில் விபத்து: 19 வயது யுவதி பலி

0

கந்தளாய் – ரஜ எல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) காலை, குறித்த பகுதியில் பயணித்த வான், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக  காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தொடரும் சீரற்ற வானிலை: கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை

காவல்துறையினர் விசாரணை

கந்தளாய் – ரஜ எல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்தவராவார்.

விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன்,

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைப்பாவையாக செயற்படும் காவல்துறையினர்: விஜேதாச ராஜபக்ச விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version