Home முக்கியச் செய்திகள் திருமண பந்தத்தில் இணையச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்த நிலை

திருமண பந்தத்தில் இணையச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்த நிலை

0

கொழும்பு கொள்ளுப்பிட்டி காலி வீதியின் பாடசாலை வீதி பகுதியில், இன்று காலை (15)மணமக்கள் சென்ற திருமண காரும் மற்றுமொரு காரும் வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மணமக்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். 

காயமடைந்தவர்களில் மணமகனும், மணமகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

திருமண காரின் சாரதி, மற்றைய காரின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என மூவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காவல்துறை விசாரணை

கொள்ளுப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரையின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Source: https://ibctamil.com/article/accident-in-kollupitiya-wedding-couple-injured-1721045568?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version