Home இலங்கை சமூகம் வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் : பலர் படுகாயம்

வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் : பலர் படுகாயம்

0

மாத்தறையிலிருந்து (Matara) நுவரெலியாவுக்கு (Nuwara Eliya) சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சுற்றுவட்டத்தில் உள்ள டெஸ்போட் வட்ட பகுதியில் இன்று (10) அதிகாலை 5:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வானின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வான் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version