Home இலங்கை சமூகம் அதிகாலை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 4 பேர் படுகாயம்

அதிகாலை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 4 பேர் படுகாயம்

0

களுத்துறை (Kalutara) – பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (15) அதிகாலை 4 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

தொழில்நுட்பக் கோளாறு

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version